தென்மாநில கபடி போட்டி எஸ்.ஆர்.எம்., அணி முதலிடம்
தென் மாநில அளவிலான கபடி போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி முதலிடத்தை பிடித்தது.
ஸ்ரீ வீரமுனியாண்டவர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், தென் மாநில அளவிலான கபடி போட்டி, தஞ்சாவூர், தென்னங்குடியில், மூன்று நாட்களாக நடந்தன.
போட்டியில், பல்வேறு பகுதிகளில் இருந்து, 10க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
காலிறுதியில் எஸ்.ஆர்.எம்., அணி, 31 – 20 என்ற கணக்கில், கட்டக்குடி கிளப்பையும், அரையிறுதியில், எஸ்.ஆர்.எம்., அணி, 38 – 24 என்ற கணக்கில் பேங்க் ஆப் பரோடா அணியையும் தோற்கடித்தது.
விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, 31 -20 என்ற கணக்கில் தமிழக போலீஸ் அணியை வீழ்த்தி முதலிடத்தை பிடித்து, 1.50 லட்சம் ரூபாய் ரொக்க பரிசை தட்டிச் சென்றது.