பழனிசாமி பிறந்த நாளில் மக்களுக்கு அன்னதானம்

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின், 71வது பிறந்த நாளை முன்னிட்டு, மகளிரணி சார்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆயிரம் விளக்கு தொகுதி, 118 வது வார்டு, அவ்வை சண்முகம் சாலையில் நடந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., மகளிர் அணி செயலருமான வளர்மதி, பொதுமக்களுக்கு, அன்னதானம் வழங்கினார்.

கட்சியின் இலக்கிய அணி இணை செயலரும், 118வது வார்டு முன்னாள் கவுன்சிலருமான சிவராஜ் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலர் சங்கரதாஸ், ஆயிரம் விளக்கு வடக்கு பகுதி செயலர் நுங்கை செல்வகுமார், மாவட்ட மகளிர் அணி செயலர்கள் ராஜேஸ்வரி, ஜான்சி ராணி மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *