தமிழக அரசு அச்சகத்தில் கருணாநிதி சிலை திறப்பு
சென்னை, தரமணியில் உள்ள தமிழரசு அச்சக வளாகத்தில், 25 லட்சம் ரூபாய் செலவில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு தோரண வாயில் மற்றும் கருணாநிதியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
இவற்றை, துணை முதல்வர் உதயநிதி, நேற்று திறந்து வைத்தார். இதையொட்டி, தமிழரசு இதழ் தொடர்பான புகைப்பட கண்காட்சியை, உதயநிதி பார்வையிட்டார்.
அச்சக செயல்பாடு குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சென்னை மேயர் பிரியா, செய்தி துறை செயலர் வைத்தியநாதன், கூடுதல் இயக்குனர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.