ஆன்லைனில் ரூ.43 லட்சம் மீட்பு உரியவர்களிடம் ஒப்படைப்பு
பங்குச்சந்தை மற்றும் பகுதி நேர வேலைவாய்ப்பு தொடர்பான ‘ஆன்லைன்’ மோசடி புகார்கள் மீது, ஆவடி போலீஸ் கமிஷனரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், ஏப்ரல், மே மாதங்களில், ஆவடி சைபர் கிரைம் பிரிவில் பெறப்பட்ட புகாரில் இருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
பாதிக்கப்பட்டோர் செலுத்திய வங்கி பரிவர்த்தனைகள் கொண்டு, சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு கடிதம் கொடுத்து, மோசடி நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
மோசடி நபர்களின் வங்கி கணக்கில் இருந்து 43.53 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டது. இத்தொகையை, உரியவர்களிடம் கூடுதல் கமிஷனர் பவானீஸ்வரி நேற்று ஒப்படைத்தார்.