மாவட்ட கேரம் சாம்பியன்ஷிப் டில்லிபாபு, காசிமா முதலிடம்சென்னையில் நடந்த மாவட்ட அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்கள் பிரிவில் டில்லிபாபு, பெண்கள் பிரிவில் காசிமா இருவரும் முதலிடம் பிடித்தனர்.
சென்னையில் நடந்த மாவட்ட அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்கள் பிரிவில் டில்லிபாபு, பெண்கள் பிரிவில் காசிமா இருவரும் முதலிடம் பிடித்தனர்.
சென்னை மாவட்ட கேரம் சங்கம் மற்றும் ஒய்.எம்.சி.ஏ., மெட்ராஸ் இணைந்து, 39வது, மாவட்ட அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டியை, ராயபுரத்தில் நடத்தின.
இருபாலருக்குமான இப்போட்டிகள், ஏப்., 29ல் துவங்கி, மே 3ல் முடிந்தன.
இதில், கேடட், சப் – ஜூனியர், ஜூனியர், யூத், தனி நபர், இரட்டையர், வெட்ரன்ஸ் உட்பட 14 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், ஆண்கள் தனிநபர் பிரிவில், எல்.ஐ.சி., வீரர் டில்லிபாபு முதலிடம் பிடித்து, கோப்பை வென்றார்.
அருண்கார்த்திக், பாரதிதாசன், ரமேஷ்பாபு முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.
பெண்கள் தனிநபர் பிரிவில், இண்டியன் ஆயில் கம்பெனி வீராங்கனை காசிமா முதலிடம் பிடித்தார்.
நாகஜோதி, சோபிகா, செம்மொழி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.
கேடட் சிறுவர் பிரிவில் யஷ்வந்த், தமிழ்ச்செல்வன், பிரஞ்சன் சாய், சக்திவேல் முறையே முதல் நான்கு இடங்களை பிடித்தனர்.
சிறுமியர் பிரிவில் சாதனா, காயத்திரி, நேகா, ஸ்மைர்னா ஆகியோர் முதல் நான்கு இடங்களைப் பிடித்தனர்.
ஆண்கள் ஜூனியர் பிரிவில், நவீத் அக்மத், ஆமோஸ், அப்துல்லா, சாய்ஷவான் ஆகியோர் முதல் நான்கு இடங்களையும், பெண்கள் பிரிவில், சஹானா, ஹரணி, காவ்யா, சஞ்சனா முறையே முதல் நான்கு இடங்களை வென்றனர்.