ஊத்துக்காட்டு எல்லையம்மனுக்கு 1,008 இளநீர் அபிஷேகம் விமரிசை
பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில், ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், கோடை வெயில் தணிந்து மழை பெய்ய வேண்டி, அம்மனை குளிர்விக்கும் வகையில், நேற்று இளநீர் அபிஷேகம் நடந்தது.
பூந்தமல்லியை சேர்ந்த 1,008 பெண்கள், பூந்தமல்லி வரதராஜபெருமாள் கோவிலில் இருந்து, இளநீர் சுமந்தவாறு ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் வரை ஊர்வலமாக நடந்து சென்று, அம்மனுக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
இரவு, அம்மன் வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.