அஞ்சல் காப்பீடு முகவர்கள் பணி வரும் 16ல் தாம்பரத்தில் நேர்காணல்
அஞ்சல் துறையின் தாம்பரம் கோட்டத்தில், ஆயுள் காப்பீடு முகவர்கள் பணிக்கு, வரும் 16ம் தேதி நேர்காணல் நடக்கிறது.
அஞ்சல் துறையின் தாம்பரம் கோட்டத்தில், காப்பீடு, ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பொறுப்புக்கு, உரிய நபர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதில், பணிபுரிய விருப்பமுள்ளோர், வரும் 16ம் தேதி, தாம்பரம் கோட்டம், அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், காலை 11:00 மணிக்கு நடக்கும் நேர்க்காணலில் பங்கேற்கலாம்.
இப்பணிக்கு 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல், 50 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பற்றோர், இளைஞர்கள், முன்னாள் வாழ்வியல் ஆலோசகர்கள், படை வீரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், காப்பீடு விற்பனையில் அனுபவம் உள்ளவர்கள், கணினி இயக்குவதில் திறன் பெற்றவர்கள் உள்ளிட்டோர், இந்த நேர்காணலில் பங்கேற்கலாம்.
ஒப்புதல் அளிக்கப்பட்ட விகிதங்களில் ஊக்கத்தொகைகள் அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள், தங்களது சுயவிபரக் குறிப்பு, வயது, கல்வி, பணி அனுபவம் தொடர்பான அசல், நகல் சான்றிதழுடன் வர வேண்டும்.
தேர்வு செய்யப்படுவோர், 5,000 ரூபாய் வைப்பு தொகை மற்றும் தற்காலிக உரிமக் கட்டணம், 50 ரூபாய் செலுத்த வேண்டும். இது, அரசு பணி இல்லை. கமிஷன் அடிப்படையிலானது; பயணப்படி வழங்கப்படாது.
இத்தகவலை, தாம்பரம் அஞ்சல் மூத்த கண்காணிப்பாளர் கமல்பாஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.