தேசிய ‘ஹாஞ்சி’ கராத்தே போட்டி சென்னை வீரர்களுக்கு 4 தங்கம்
கோஜுரியு கராத்தே இந்தியா, ஆசிய உலக கூட்டமைப்புகள் இணைந்து, இரண்டாவது தேசிய கோஜுரியு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியை, பஞ்சாப் மாநிலத்தின் கபுர்தலா மாவட்டத்தில், கடந்த சனிக்கிழமை நடத்தின.
இதில், தமிழகம், பஞ்சாப், கர்நாடகா, பீஹார், உத்தர பிரதேசம் உட்பட 13 மாநில அணிகள் பங்கேற்றன. ஆறு வயது முதல் 35 வயது வரை உள்ள வீரர்கள், 500க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கு பெற்றனர்.
அதில், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ‘ஹாஞ்சி கராத்தே’ மாஸ்டர் ஆர்.ஈஸ்வரனின் மாணவர்கள், நான்கு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று அசத்தினர்.