கிளாம்பாக்கம், அக்கரைக்கு ஏர்போர்ட் பஸ் சேவை துவக்கம்
சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம், அக்கரைக்கு புதிய மாநகர பேருந்துகளின் சேவையை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், குறு, சிறு தொழில்துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் நேற்று, கொடியசைத்து துவங்கி வைத்தனர்.
அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், ”சென்னை விமான நிலையம் வந்து செல்ல, சென்னை மாநகரின் பல பகுதிகளுக்கு பேருந்து இயக்க, பயணியர் வேண்டுகோள் விடுத்தனர். அதற்காக இரு தடங்களில் பேருந்து இயக்கப்படுகிறது. எளிய மக்கள், நடுத்தர கிராமப்புறத்தைச் சேர்ந்தோருக்கு, இந்த புதிய பேருந்து சேவை நிறைவாக இருக்கும்,” என்றனர்.