ராஜிவ் அரசு மருத்துவமனை முதல்வர் நியமனம்
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனை. இதன் முதல்வராக இருந்த தேரணிராஜன் என்பவர், 2020ல் நியமிக்கப்பட்டார்.
இவர், கொரோனா கட்டுப்படுத்துதல் மற்றும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் உட்கட்டமைப்பு மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வந்தார்.
இந்நிலையில் தேரணிராஜன், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம், கூடுதல் இயக்குனராக இருந்த கே.சாந்தாராமன், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் செந்தில்குமார் பிறப்பித்துள்ளார்.