கிருஷ்ண ரதயாத்திரை விமரிசை
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கமான, இஸ்கான் சார்பில், பெரம்பூரில் நேற்று ஸ்ரீ கவுர நித்தாய் என்ற பெயரில், கிருஷ்ண ரத யாத்திரை நடந்தது.
உலக நன்மைக்காகவும், அமைதி வேண்டியும் நடத்தப்பட்ட இந்த ரத யாத்திரை, பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை 3:30 மணிக்கு துவங்கியது. பானு சுவாமி மகாராஜ் தலைமை வகித்தார்.
திரளான பக்தர்கள் பங்கேற்று வீதி முழுதும் கோலமிட்டும், பஜனை பாடல்கள் பாடியும், தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். ரத யாத்திரை, மாலை 6:30 மணியளவில், பெரியார் நகரில் உள்ள திருவள்ளுவர் கல்யாண மண்டபத்தில் நிறைவடைந்தது.
தொடர்ந்து, மண்டபத்தில் கீர்த்தனை, உபன்யாசம், ‘துருவ லோகம்’ என்ற தலைப்பிலான நாடகம் போன்றவை நடத்தப்பட்டன. இறுதியில் பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.