சவுகார்பேட்டையில் ராம நவமி யாத்திரை
ராமபிரான் அவதரித்த தினமான ஸ்ரீராம நவமி, நாடு முழுதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நாடு முழுதும் உள்ள கோவில்களில் சிறப்பு பஜனைகள், நிகழ்ச்சிகள், வழிபாடுகள், உத்சவங்கள் நடந்தன. இந்நாளில், பக்தர்கள் விரதம் இருந்து ராமரை வழிபடுகின்றனர்.
அந்த வகையில், ராம நவமியை முன்னிட்டு, சவுகார்பேட்டையில் ராம நவமி கலச யாத்திரை நேற்று நடந்தது.
கணேஷ் மஹோத்சவ் மண்டல், சவுக்கார்பேட்டை ராஜா ஆகியோர் சார்பில் நடந்த கலச யாத்திரை விழாவில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, தலையில் கலசம் ஏந்தியபடி யாத்திரையாக சென்றனர்.
சவுகார்பேட்டை அண்ணாபிள்ளை தெருவில் உள்ள ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோவிலில் துவங்கிய யாத்திரை, மின்ட் தெரு, என்.எஸ்.சி.போஸ் சாலை வழியாக வந்து, பழமைவாய்ந்த பைராகி மடம் சீத்தாராம் கோவிலில் முடிவடைந்தது.
இதில் பங்கேற்ற பெண்கள், ஜெய் ஸ்ரீராம் என, கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.