துாய்மை பணியாளர் நல வாரியத்தில் இணைய மாநகராட்சி வேண்டுகோள்

சென்னையில் துாய்மை பணியில் ஈடுபடுவோர், துாய்மை பணியாளர் நல வாரியத்தில் இணைந்து, அரசின் சலுகைகளை பெற, மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், துாய்மை பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த தகவல் கையேட்டை நேற்று, மேயர் பிரியா வெளியிட்டார். துாய்மை பணியாளர்கள் நல வாரிய அடையாள அட்டையை, 300 பேருக்கு வழங்கினார்.

சென்னை மாநகராட்சியில், 3,959 நிரந்தர துாய்மை பணியாளர்கள், 17,659 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் உள்ளனர்.

இவர்கள், நல வாரியத்தில் இணைவதன் வாயிலாக, விபத்தில் மரணமடைந்தால், ஐந்து லட்சம் ரூபாய்; உறுப்புகளை இழந்தால் ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும்.

இயற்கை மரண உதவி, ஈமச்சடங்கு உதவி, முதியோர் ஓய்வூதியம், திருமண உதவி தொகை போன்றவை வழங்கப்படும்.

இதுபோன்ற பல்வேறு சலுகைகள் கிடைப்பதால், துாய்மை பணியாளர்கள் அனைவரும் இணைந்து பயன்பெற வேண்டும் என, மாநகராட்சி வேண்டுகேள் விடுத்துள்ளது.

நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *