ஆவின் பாலகத்தில் 5ல் மருத்துவ முகாம்
ஆவின் சார்பில், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை, சென்னை ரோட்டரி கிளப் உதவியுடன் மருத்துவ பரிசோதனை முகாம் நடக்கிறது.
இந்த முகாமில், மார்பக புற்று நோய், கருப்பை வாய் பரிசோதனை மற்றும் பல் பரிசோதனைகளை இலவசமாக செய்கிறது.
விருகம்பாக்கத்தில் உள்ள அதிநவீன ஆவின் பாலகத்தில், வரும், 5ம் தேதி, காலை 9:30 மணி முதல், 1:00 மணி வரை நடக்கும் முகாமை, ஆவின் இணை நிர்வாக இயக்குனர் பொற்கொடி துவக்கி வைக்கிறார்.
கூடுதல் தகவலுக்கு, 99443 53459, 94449 15453, ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.