அருங்காட்சியகமாக மாறுகிறது விக்டோரியா ஹால்: மேயர் பிரியா

சென்னை கொளத்துார் மற்றும் திரு.வி.க.நகர் சட்டசபை தொகுதிகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளை, ஹிந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

பின், மேயர் பிரியா கூறியதாவது:

ரிப்பன் மாளிகை கட்டட வளாகத்தில் உள்ள, வரலாற்று சிறப்புமிக்க விக்டோரியா பொது அரங்கத்தை புனரமைக்கும் பணி, 32.62 கோடி ரூபாயில் நடந்து வருகிறது.

இந்த அரங்கில் என்னென்ன சிறப்புகள் இருந்ததோ, அவற்றை பொதுமக்கள் அறியும் வகையில், அருங்காட்சியமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கட்டடத்தின் முதல் தளத்தில் கலையரங்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணிகள் முடித்து, வரும் ஜூனில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

கொளத்துார் தொகுதியில் ஏதேனும் ஒரு பூங்காவில், முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *