மகள் காதலை எதிர்த்து தீக்குளிப்பு பெரும் பாக்கத்தில் தாய் உயிரிழப்பு
பெரும்பாக்கம், பெரும்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி ஜெயா, 45. தம்பதிக்கு திருமணமாகி, 23 ஆண்டுகளாகின்றன. மூன்று மகள்கள் உள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த ஜெயா, கடந்த, 23ல் தேதி நள்ளிரவு வீட்டில் உள்ள, ‘பம்ப் ஸ்டவ்’வில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து, தனக்கு தானே ஊற்றி தீ வைத்து கொண்டார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து, பெரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.