பைக் மீது லாரி மோதி தனியார் ஊழியர் பலி

கூடுவாஞ்சேரி, ஆதனுார், வேலுதிருநகரை சேர்ந்தவர் ஹரிஷ்தாஸ், 20. இவர், சோழிங்கநல்லுார், எல்காட் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில், சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.

நேற்று காலை 8:00 மணிக்கு, இரவுப்பணி முடித்து கூடுவாஞ்சேரியில் உள்ள வீட்டிற்கு செல்ல, தனது பல்சர் இருசக்கர வாகனத்தில், சோழிங்கநல்லுாரில் இருந்து செம்மொழி சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

பெரும்பாக்கம் சர்ச் அருகே சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத ஜல்லி ஏற்றி வந்த லாரி, ஹரிஷ்தாஸ் பைக் மீது மோதியது.

இதில், சாலையில் விழுந்த ஹரிஷ்தாஸ் தலை மீது, லாரி சக்கரம் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆனால், லாரி ஓட்டுனர் லாரியை நிறுத்தாமல் தப்பினார்.

சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ஹரிஷ்தாஸ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவணைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற லாரி ஓட்டுனர் குறித்து, அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *