ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் நில மோசடி வழக்கில் கைது
திருமங்கலம், அண்ணா நகர் மேற்கு, பாடிகுப்பம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் அஜ்மல்கான், 41; தனியார் தொலைக்காட்சி நிறுவன ஊழியர்
இவர், நிலம் வாங்குவதற்காக, மெகா பிராபர்டி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர்களான ராஜ் ஜாக்கிரியாஸ், ஆனந்த்குமார் ஆகிய இருவரை அணுகினார்.
அவர்கள், காட்டாங்கொளத்துாரில், 1,800 சதுர அடியில் வீட்டு மனை இருப்பதாக கூறி, 2023ல் ஆறு லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர்.
வீட்டு மனையும் வாங்கி தாராமல், பணத்தையும் திரும்ப தாராமல், இருவரும் ஏமாற்றி வந்தனர். இதுகுறித்து அஜ்மல்கான், திருமங்கலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரத்னகுமாரிடம் புகார் அளித்தார்.
போலீசார் விசாரித்ததில், இருவரும் அஜ்மல்கானிடம் பணம் பெற்று, மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.
இதையடுத்து, கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ராஜ் ஜாக்கிரியாஸ், 41, ஊரப்பாக்கம் ஆனந்த்குமார், 30, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.