ரயிலில் போன் பறித்தவர் கைது
திருவொற்றியூர், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவுஷன் தாஸ், 39, திருப்பூர் மாவட்டத்தில், கிரானைட் கல் ஒட்டும் வேலை செய்கிறார். நேற்று முன்தினம், பெங்களூரு – தானாபூர் வரை செல்லும், சங்கமித்ரா விரைவு ரயிலில் பயணம் செய்துக் கொண்டிருந்தார்.
திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே ரயில் மெதுவாக சென்றபோது, அடையாளம் தெரியாத வாலிபர் ரவுஷன் தாஸின், 10,000 ரூபாய் மதிப்பிலான, ‘விவோ வி – 15’ ரக மொபைல் போனை பறித்து தப்பினார்.
இது குறித்து, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரித்தனர். இதில், திருவொற்றியூர், அண்ணாமலை நகரைச் சேர்ந்த ராஜேஷ், 26, என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து, மொபைல் போன் மற்றும் கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
.